செய்திகள் :

ஆந்திராவில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!

post image

ஹைதராபாத்: இன்று முதல் ஆந்திர அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. விருப்பப்படி விதிகளை மீறியதற்காக வாகன ஓட்டிகளை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும் தற்போது கண்டிப்பாகிவிட்டது. பந்தயம் அல்லது ஸ்டண்ட் செய்வது கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

இத்துடன் நிற்கவில்லை, முதல் முறை பாக்கெட்டை பதம் பார்க்காது என்றாலும் மீண்டும் மீண்டும் குற்றங்கள் புரியும் போது பெரும் அபராதங்களை ஈர்க்கும். சில சந்தர்ப்பங்களில் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவது போன்றவை 6 மடங்கு அபராதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கான அபராதம் எலவ்வாறு விதிக்கப்படும் குறித்து இங்கே பார்ப்போம்:

  • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இது பில்லியன் மற்றும் டிரிபிள் ரைடிங்கிற்கும் பொருந்தும்.

  • சீட் பெல்ட் இல்லை என்றால் ரூ.1,000 அபராதம்.

  • குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமும், லைசென்சும் ரத்து செய்யப்படும்.

  • மைனர் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ.25,000 மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

  • மைனர் வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ.1,000 மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

  • ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் ரூ.5,000 அபராதம், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

  • மாசு சான்றிதழ் இல்லை என்றால் ரூ.1,500 வழங்கப்படும்.

  • காப்பீடு இல்லை என்றால் ரூ.2,000 அபராதம் வழங்கப்படும். மீண்டும் குற்றம் செய்தால் ரூ.4,000 அபராதம் வழங்கப்படும்.

  • பதிவு புதுப்பித்தல் வரிசையில் இல்லை என்றால் முதல் முறையாக ரூ.2,000 அபராதமும், இரண்டாவது முறையாக ரூ.5,000 வழங்கப்படும்.

  • வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால், முதல் முறைாக ரூ.1,500 அபராதமும் இரண்டாவது முறையாக ரூ.10,000 வழங்கப்படும்.

  • வேகம், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சிக்னல் தாண்டுதல் ஆகியவற்றுக்கு ரூ.1,000 அபராதம் வழங்கப்படும்.

  • பந்தயம் அல்லது ஸ்டண்ட் செய்தல் ரூ.5,000 அபராதமும் மீண்டும் குற்றம் புரிந்தால் ரூ.10,000 அபராதம் வழங்கப்படும்.

  • ஆட்டோ ஓட்டுநர்களுக்கான புதிய விதிகளை அமல்படுத்தி வரும் நிலையில், ஓட்டுநர்கள் சீருடையில் இருக்க வேண்டும், இல்லை என்றால் முதல் முறையாக ரூ.150 அபராதமும் மீண்டும் செய்யும் தவறுக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: 8 ஆக உயர்ந்த பலி!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்... மேலும் பார்க்க

யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை முயற்சி?

சண்டிகரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பணமோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.சண்டிகரின் சங்க்ரூர் தொகுதி எம்எல்ஏ-வான ஆம் ஆத்மியைச் சேர்ந்த நரேந்தர் கௌர் பராஜ், தன்னை பவானிகர் பகுதி லாரி ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச் சரிவு: மேலும் 14 பேர் மீட்பு! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் 55 பேர் சிக்கிய நிலையில், 47 பேரை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரை 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.உத்தரகண்டில் இந்திய-தி... மேலும் பார்க்க

தில்லி தனியார் வங்கியில் தீ விபத்து!

தில்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கோல்சா சினிமாவுக்கு எதிரே உள்ள ஆக்சிஸ் வங்கியில் இன்று காலை 9:25 மண... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். தில்லியில் 'வைகை', 'பொதிகை' என்ற பெயரில் தமிழ்நாடு இல்லம் உள்ளது. இந்நிலையில் ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பின்மை அரசுக்கு பெரிய சவால்: உ.பி. அரசு

உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதாக அம்மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை குறி... மேலும் பார்க்க