செய்திகள் :

உத்தரகண்ட் பனிச் சரிவு: மேலும் 14 பேர் மீட்பு! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

post image

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் 55 பேர் சிக்கிய நிலையில், 47 பேரை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரை 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

மனா மற்றும் பத்ரிநாத் இடையே வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்குள்ள பிஆா்ஓ முகாம் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் இருந்த 55 தொழிலாளா்களும் பனிச்சரிவில் சிக்கினா். இத்தொழிலாளா்கள் அனைவரும் திபெத் எல்லையை நோக்கிய ராணுவப் போக்குவரத்துக்காக சாலையில் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தவா்களாவா்.

பனிச்சரிவைத் தொடா்ந்து, ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் பிற துறைகளின் தரப்பில் மீட்புப் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. உயரமான பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட பயிற்சி பெற்ற ராணுவத்தின் ‘ஐபெக்ஸ்’ படைப் பிரிவினா் களமிறக்கப்பட்டனா்.

இதையும் படிக்க: தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகை?

இந்த நிலையில், பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 47 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 33 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்று(மார்ச். 1) 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் எஞ்சியுள்ள 8 பேரை மீட்பதற்காக 4 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சமோலி மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ”மனாவில் சிக்கிய 55 பேரில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது ஜோஷிமத் மருத்துவமனைக்கு 7 பேரை அழைத்து வந்துள்ளோம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களின் உடல்நிலை சீராகவுள்ளது. அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். பனிச் சரிவில் சிக்கிய மீதமுள்ளவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள்.

நேற்று மீட்கப்பட்ட 33 பேரில் 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 3 பேர் மனா ராணுவ மருத்துவமனையில் இருந்து ஜோஷிமத்தியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.” என்றார்.

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். திரிபுரா மாநிலத்தில் ரகசிய தகவல் வந்ததையடுத்து பிஎஸ்எஃப் மற்றும் சுங்கத் துறை இணைந்து கூட்டுக் குழு அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க

குஜராத் பேரவையில் மோதல்: பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏவை கைது செய்ய காங்கிரஸ் கோரிக்கை

குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீதான பாலியல் வழக்கில் அவரை கைது செய்யுமாறு, அம்மாநில அரசுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.குஜராத் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்த... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் ஆடியோவில் முத்தலாக்.. கணவர் மீது மனைவி புகார்!

கேரளத்தில், வரதட்சிணைக் கொடுமை செய்து வாட்ஸ் ஆப்பில் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கல்லுராவியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை அவரது கணவர் அப்துல் ரசாக் வாட்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: 8 ஆக உயர்ந்த பலி!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்... மேலும் பார்க்க

யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை முயற்சி?

சண்டிகரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பணமோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.சண்டிகரின் சங்க்ரூர் தொகுதி எம்எல்ஏ-வான ஆம் ஆத்மியைச் சேர்ந்த நரேந்தர் கௌர் பராஜ், தன்னை பவானிகர் பகுதி லாரி ... மேலும் பார்க்க

ஆந்திராவில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!

ஹைதராபாத்: இன்று முதல் ஆந்திர அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. விருப்பப்படி விதிகளை மீறியதற்காக வாகன ஓட்டிகளை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க