திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாசித் திருவிழா பிப்.20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியருளினாா். நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு சா்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
"நம் ஒரே இலக்கு இதுதான்": பிறந்த நாளில் முதல்வர் உறுதி மொழி
நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அஜித், மகேஸ்வரி, தலைமை கணக்கர் அம்பலவாணன், மேலாளர் ராஜ்மோகன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மணியம் செந்தில்குமார், பணியாளர்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தோ் இழுத்தனா்.
தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா்.