பஞ்சாப்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி
டார்ன் டாரன்: பஞ்சாப் மாநிலம் டார்ன் டாரன் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.
பன்டோரி கோலா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
இடிந்த விழுந்த வீடு மிக மோசமான சேதமடைந்துள்ளது. வீட்டின் மேற்கூரை பலமிழந்து காணப்பட்ட நிலையில், அதில் மிக எடை கொண்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததால் மேற்கூரை இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.