செய்திகள் :

Uttarakhand Avalanche: கடும் பனிச்சரிவில் சிக்கிய 22 பேரின் நிலை என்ன..? தொடரும் மீட்புப்பணி!

post image

நேற்று அதிகாலை உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் மனா கிராமத்திற்கு அருகில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தக் கிராமம் இந்தியா - சீனா எல்லைக்கு அருகில், கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில், பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே, நடந்துக்கொண்டிருக்கும் டபுள் லேன் திட்டத்திற்காக பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளும் பனிச்சரிவால் மூடப்பட்டன.

உரிய மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சமோலி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். 57 பேர் பனிச் சரிவில் சிக்கிய நிலையில், 32 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 25 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தொடரும் மீட்புப்பணி!'

மீட்புப்பணிகள் குறித்து அதிகாரிகள், "மதியத்திற்குள் 10 பணியாளர்களை மீட்டு அருகில் இருக்கும் மனா மருத்துவமனைக்கு கொண்டுசென்றுவிட்டோம். 22 பணியாளர்கள் அவர்களே பனிச்சரிவுக்கு கீழ் இருந்து தப்பித்து பத்ரிநாத்திற்கு பத்திரமாக சென்றுவிட்டனர்" என்று கூறியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே கடும் பனிப்பொழிவு உள்ளதால், மிகுந்த சிரமங்களுகிடையே மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிஆர்ஓ செயல் பொறியாளர் சிஆர் மீனா கூறுகையில், “ பனிச்சரிவு ஏற்பட்ட மனா கிராமத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், அங்கு அனுப்பி வைக்கப்பட்ட 4 ஆம்புலன்ஸ்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 60-65 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் தளத்தில், “ பனிச்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர் சகோதரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டும். அவர்களுக்காக பத்ரிநாதரை வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Telangana Tunnel Collapse: 'இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை' - மூன்றாவது நாளாக தொடரும் மீட்புப்பணி

தெலங்கானாவில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்திற்காக சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து நால்கொண்டாவிற்கு தண்ணீர் கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ... மேலும் பார்க்க