செய்திகள் :

கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

post image

புதுதில்லி: 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

2024-25 பயிர் ஆண்டு அதாவது ஜூலை முதல் ஜூன் வரை, 115 மில்லியன் டன் கோதுமை உற்பத்தியை எட்ட வேளாண் அமைச்சகம் இலக்கு வைத்துள்ள போதிலும் குறைந்த கொள்முதல் இலக்கு தற்சமயம் வந்துள்ளதாக தெரிவித்தது.

கோதுமை, நெல் மற்றும் சிறுதானியங்கள் ஆகிய ரபி பயிர்களுக்கான கொள்முதல் இலக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில உணவு செயலாளர்களுடனான கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

கலந்துரையாடல்களுக்குப் பிறகு, வரவிருக்கும் 2025-26 சந்தைப்படுத்தல் பருவத்தில் கோதுமை கொள்முதல் இலக்கு 31 மில்லியன் டன்னாகவும், அரிசி 7 மில்லியன் டன்னாகவும், சிறுதானியங்கள் 1.6 மில்லியன் டன்னாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

வரவிருக்கும் சந்தைப்படுத்தல் பருவத்தில் கோதுமை மற்றும் அரிசி கொள்முதலை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதே வேளையில் சிறுதானியங்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

ஏப்ரல் முதல் தொடங்கும் 2025-26 ரபி சந்தைப்படுத்தல் பருவத்தில், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,425 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில நிறுவனங்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளைப் பெறுவதையும் நலத்திட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் உறுதி செய்ய வகையில் கோதுமை கொள்முதல் நடைபெற்றது.

2024-25ல் கோதுமை கொள்முதலில் 30 முதல் 32 மில்லியன் டன் இலக்குக்கு மாறாக சுமார் 26.6 மில்லியன் டன்னை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னேற்றம்

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி இந்தியாவில் அறிமுகம்!

ஹைதராபாத்: சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்06 5ஜி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி எம் தொடரின் இந்த சமீபத்திய வடிவமைப்புகள், சக்திவாய... மேலும் பார்க்க

கிளை நிறுவனத்தை மூடிய பிளிப்கார்ட், ஊழியர்கள் பணிநீக்கம்!

புதுதில்லி: இ-காமர்ஸ் நிறுவனமான, 'பிளிப்கார்ட்' அதன் கிளை நிறுவனமான ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை மூடுவதுடன், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது.2017ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தங்கள் த... மேலும் பார்க்க

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னேற்றம்

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 4.6 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது. இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது: நிலக்கரி, கச்சா எண்ணெய், ... மேலும் பார்க்க

நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பு!

புதுதில்லி: ரயில்-கடல்-ரயில் பாதை வழியாக கொண்டு சென்ற நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாகி 54 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.பல்வேறு மின் உற்பத்தி நிலை... மேலும் பார்க்க

அந்நிய செலாவணி கையிருப்பு $640.479 ஆக உயர்வு!

மும்பை: பிப்ரவரி 21ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.758 பில்லியன் டாலர் அதிகரித்து 640.479 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கினால் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக குறைத்து, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 28 காசுகள் குறைந்து ரூ.87... மேலும் பார்க்க