விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 400 குறைந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு மேலும் ரூ.160 குறைந்துள்ளது.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிரடி ஏற்றத்தைக் கண்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டு ஒரு பவுன் தங்கம் ரூ. 64,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, அடுத்தடுத்து இரு நாள்களில் ரூ. 520 குறைந்து வியாழக்கிழமை காலை ஒரு பவுன் ரூ. 64,080-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க :வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!
வெள்ளிக்கிழமை அதிரடியாக ரூ. 400 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 63,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 7,960-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு மேலும் ரூ.160 குறைந்து ரூ. 63,520-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 7,940-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடர்ந்து 2-ஆவது நாளாக எவ்வித மாற்றமின்றி கிராம் ரூ. 108-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை 2-ஆவது நாளாக குறைந்துள்ளது. கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ. 106.90-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,04,9000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.