செய்திகள் :

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

post image

சென்னை: நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 5.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,965 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன.

இதையும் படிக்க |2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சனிக்கிழமை (மார்ச். 1) காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 5.50 உயர்த்தப்பட்டு ரூ.1,965 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது இன்றிலிருந்து (மார்ச். 1) அமலுக்கு வருகிறது.

வீட்டு சமையல் எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை

எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி ரூ.818.50 ஆகவே நீடிக்கிறது.

மணிப்பூர்: கிளர்ச்சியாளர் உள்பட 5 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் இன்று (மா.1) தெரிவித்துள்ளனர்.காங்போக்பி மாவட்டத்த... மேலும் பார்க்க

முதல்வர் பிறந்த நாள்: ராகுல் காந்தி, விஜய், ரஜினி வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது ப... மேலும் பார்க்க

விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!

விராலிமலை அருகே திருநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் வலையில் போதுமான மீன்கள் வலையில் கிடைக்காததால் கரையில் காத்திருந்த மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.விராலிமலை ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 400 குறைந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு மேலும் ரூ.160 குறைந்துள்ளது.கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிரடி ஏற்றத்தைக் கண்டு வந்த நிலையில... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

புதுதில்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 72 ஆவது பிறந்தநாளை சனிக்கிழமை(மா... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் பலி

தெலங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.அங்குள்ள... மேலும் பார்க்க