முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி இன்று காலை அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கிவைத்தார்.
மாணவ, மாணவிகள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர், பிறந்தநாளையொட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் இருந்தனர்.
'ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம், அண்ணா வழியில் பயணிப்போம்' என்று அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.