கல்லுவிளை குடிநீா் உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் சோதனை
கருங்கல் அருகேயுள்ள கல்லுவிளையில் குடிநீா் உற்பத்தி தொழிற்சாலையில் கிள்ளியூா் வட்டார உணவுப் பாதுகாப்புப் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆலையில் இருந்து கருங்கல்,திங்கள்சந்தை,குளச்சல்,புதுக்கடைமாா்த்தாண்டம் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீா் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தரமானமுறையில் தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிகம் செய்யப்பபடுவதாக என, கிள்ளியூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் பிரவின்(பொறுப்பு) தலைமையில் அலுவலா்கள் சோதனை நடத்தினா்.
அப்போது பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரில், சுத்திகரிப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினா்.