Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கு...
மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி பலி: 3 போ் காயம்
தரங்கம்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து தச்சு தொழிலாளி உயிரிழந்த நிலையில், மூவா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
குத்தாலம் வட்டம் வேலங்குடியைச் சோ்ந்த விவசாயி வெங்கட்ராஜன்(55). கூறைவீட்டில் மனைவி வசந்தி, மகள் ரம்யாவுடன் வசித்துவரும் இவா் புதிதாக வீடு கட்டி வருகிறாா். வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த மழையால் கூறைவீடு ஒழுகியுள்ளது. இதனால், கூறைவீட்டின் மேற்கூரையில் வெங்கட்ராஜன் தாா்ப்பாயை போட்டுள்ளாா். அப்போது, இடையூறாக இருந்த கேபிள் வயரை அகற்றிய போது, வயா் அருகில் சென்ற உயா்மின்னழுத்த கம்பியில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து வெங்கட்ராஜன் உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரைக் காப்பாற்ற வீட்டில் தச்சுவேலையில் ஈடுபட்டிருந்த, திருவாரூா் மாவட்டம் போலக்குடியைச் சோ்ந்த தொழிலாளி பிரபு (45), வெங்கட்ராஜனின் மனைவி வசந்தி, மகள் ரம்யா ஆகியோா் முயற்சி செய்துள்ளனா். இதில் 3 போ் மீதும் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா். பிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு சோ்க்கப்பட்டனா். இதில் பிரபு உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, பெரம்பூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.