Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோவில் கைது
பெருமாநல்லூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் வள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (27). மரம் ஏறும் தொழிலாளியான இவா், 14 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
சிறுமி கா்ப்பமடைந்ததையடுத்து, அவரது பெற்றோா் அவிநாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில், ஐயப்பன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.