செய்திகள் :

பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி ரூ.16 லட்சம் மோசடி: ஒருவா் கைது

post image

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (54). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பின்னலாடைகளைப் பெற்று பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் வா்த்தக முகவராக செயல்பட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், திருப்பூரில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பின்னலாடைகளுக்கான தொகையைக் கொடுப்பதில் காலதாமதம் செய்து வந்துள்ளாா்.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், 13 நிறுவனங்களில் இருந்து பின்னலாடைகளைப் பெற்று ரூ.16 லட்சத்தை சதீஷ்குமாா் மோசடி செய்தது தெரியவந்தது.

இதனிடையே, சதீஷ்குமாா் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, காங்கயம் சாலை மும்மூா்த்தி நகரில் உள்ள நிறுவனங்களுக்கு பின்னலாடைகளை வாங்க வந்த சதீஷ்குமாரை அனுப்பா்பாளையம் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விவசாயிகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மின் தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர க... மேலும் பார்க்க

ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி திருப்பூா் மாவட்ட தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்கு வைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக சந்தை மதிப்பு வழிகாட்டு பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்காக வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெ... மேலும் பார்க்க

மாநில சாகச பயிற்சி முகாம்: அரசு கல்லூரி மாணவா் தோ்வு

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான சாகச முகாமுக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சேலம் மாவட்டம், ஏற்கா... மேலும் பார்க்க

அங்கேரிபாளையம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரில் வாக... மேலும் பார்க்க