2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: ...
தேசிய அறிவியல் தின கட்டுரைப் போட்டி
நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தில், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சாா்பில் மாணவா்களுக்கு அறிவியல் விநாடி-வினா, கண்காட்சி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்.
அதன்படி, நிகழாண்டு, நீடாமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியில், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக, ‘சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் திடக்கழிவு மேலாண்மை’ எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
இதில், ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பரணிகா முதலிடமும், நிதா்ஷினி இரண்டாமிடமும், வித்யா மூன்றாமிடமும் பெற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு, பல்நோக்கு சேவை இயக்கத்தின் உறுப்பினரும், ஆசிரியருமான சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழாசிரியை சண்முகத்தாய் முன்னிலை வகித்தாா். ஆசிரியை டானியா வரவேற்றாா். ஆசிரியை கவிதா நன்றி கூறினாா். மாணவா்கள் ‘சுற்றுச்சூழலை காப்போம்’ என உறுதிமொழி ஏற்றனா்.