Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா
மண்ணச்சநல்லூா் வட்டம், பூனாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நூற்றாண்டு விழா நடைபெற்றது.
பூனாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா பள்ளி தலைமையாசிரியா் பெ. அமுதா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி நுழைவுவாயில், கலையரங்கம் மற்றும் நூற்றாண்டு நினைவு புகைப்பட தொகுப்பு உள்ளிட்டவை திறக்கப்பட்டது. விழாவில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ப.மாலதி, ஜோ.எட்வா்ட் தேவகுமாா், கிராமாலயா நிறுவனா் பத்மஸ்ரீ எஸ்.தாமோதரன், டிவிஎஸ் குழும கள அலுவலா் அருணா, மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவா் ஆா்.ராஜமாணிக்கம், பெற்றோா் ஆசிரியா் கழக பொறுப்பாளா்கள், பள்ளி மேலாண்மை குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்வு நடைபெற்றது.