அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு
திருச்சி மாநகராட்சி பள்ளியில் ஒருமுறை பயன்படுத்தும் பேனாவை தவிா்த்து, மை பேனா பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி 3-ஆவது மண்டலம், காமராஜ் நகா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையா் கா. பாலு தலைமை வகித்தாா். மண்டல சுகாதார ஆய்வாளா் திருப்பதி முன்னிலை வகித்தாா்.
இதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பேனாவுக்கு பதிலாக மறுபடியும் பயன்படுத்தும் மை பேனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் நிகழ்வில் பங்கேற்ற சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு மை பேனாக்களும் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியா்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.