புதிதாய் தொழில் தொடங்கிய சின்ன திரை ஜோடி!
மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா தம்பதியினர் புதிய தொழில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வானொலியில் தொகுப்பாளராக இருந்து சின்ன திரையில் அறிமுகமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இத்தொடரின் நடித்தன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இத்தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. இத்தொடரில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பின்னரும் மிர்ச்சி செந்தில் மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடரில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: கணவரை விவாகரத்து செய்த வாரிசு பட நடிகை!
பெரிய திரையிலும் இவர் தவமாய் தவமிருந்து, எவனோ ஒருவன், சென்னை - 600028, சூரரைப் போற்று உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். இவர், சில நாள்களுக்கு முன்பு இணைய மோசடியில் ரூ.15 ஆயிரம் இழந்ததாக விடியோ வெளியிட்டு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், நடிகர் மிர்ச்சி செந்தில் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “கேரளத்தில் புதிய கஃபே தொழிலை நானும் என்னுடைய மனைவி ஸ்ரீஜா இருவரும் சேர்ந்து நடத்தி வருகிறோம். தொழிலுக்காக அடிக்கடி கேரளத்துக்கு சென்று வருவதால் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
புதிதாய் தொழில் தொடங்கியுள்ள மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கு அவர்களின் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.