எம்புரான் பட டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்!
எம்புரான் படத்தின் டப்பிங் பணியில் நடிகை மஞ்சு வாரியர் ஈடுபட்டுள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தப் படத்தில் மோகன்லாலின் உதவியாளராக பிருத்விராஜ் சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்திலும் நடிகர் டொவினோ தாமஸ் கேரள மாநில முதல்வராகவும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ரெட் டிராகனாக அஜித்... குட் பேட் அக்லி டீசர்!
❤️#PriyadarsiniRamdas#EMPURAAN#Lucifer#L2E#dubbingtime️ pic.twitter.com/eTdQjxZTTB
— Manju Warrier (@ManjuWarrier4) February 28, 2025
நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக வருகிற மார்ச் 27 ஆம் தேதி எம்புரான் திரைக்கு வருகிறது.
படத்தின் முதல் பாகத்தைப்போல் இரண்டாம் பாகத்திற்கும் கதை, திரைக்கதை, வசனத்தை முரளி கோபி எழுதியுள்ளார். முன்னதாக இப்படத்தின் 32 பாத்திரங்களையும் படக்குழு அறிமுகம் செய்ததிருந்தது.
இந்த நிலையில், எம்புரான் படத்தின் டப்பிங் பணிகயில் மஞ்சு வாரியார் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.