கல்வியில் தமிழ்நாடு முன்னிலை; சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு: முதல்வர்
குட் பேட் அக்லி டீசர் வெளியானது!
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் 94 வினாடி கொண்ட டீசர் வெளியானது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தைப் பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படம், பொங்கல் திருநாளின்போது வெளியிடத் திட்டமிருந்த நிலையில், அதே சமயத்தில் விடாமுயற்சியும் வெளியானதால், குட் பேட் அக்லியின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் போஸ்டர்களில் சில குறியீடுகள் இருப்பதாகவும், அவை அஜித் குமாரின் முந்தைய கல்ட் கிளாசிக் படங்களைப் பிரதிபலிப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து, பிப். 6 ஆம் தேதியில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களிடையே வழக்கத்தைவிட பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.