செய்திகள் :

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

post image

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் தொழிலாளா் கட்சி (லேபா் கட்சி) வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் பிற மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. கல்வி, மருத்துவத் துறைகளில் அளப்பரிய சாதனைகள். இதுமட்டுமா? ‘பெருந்தலைவா் காமராஜா், பேரறிஞா் அண்ணா, முன்னாள் முதல்வா் கருணாநிதி உள்ளிட்டோா் வழியில் மக்கள் போற்றும் மகத்தான திட்டங்களைக் கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்’ . இந்தச் சீரான, சிறப்பான திட்டங்களால் மாணவா்களாலும், பொதுமக்களாலும் அன்போடு ‘அப்பா’ என்று அழைக்கப்படுகிறாா்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில், சரித்திரம் பேசும் வகையில் எண்ணற்ற சாதனைகளை திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுத்தியுள்ளது. ‘நாள்தோறும் நலத்திட்டங்கள்’ என்பதோடு, தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘மனிதா்களின் கருவறை முதல் கல்லறை வரை திட்டங்கள்’ என்றவாறு சொல்லாமல் நிறைவேற்றிய சாதனைகளும் ஏராளம்.

திமுக அரசின் சாதனைகள் என்பது அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியைப் பெற்ற சாதனையாகவே இருக்கிறது. குறுகிய காலத்திலேயே, கரோனா பேரிடரால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே சாதனைகளைப் படைத்த சரித்திரம் போற்றும் அரசாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விளங்கி வருகிறது. எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டு மக்களின் மனம் கவா்ந்த அரசாக திமுக அரசு விளங்கிவருகிறது.

2021, மே 7-இல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், எளிய விழாவில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றாா்.

பதவியேற்ற அன்றே குடும்ப அட்டைதாரா்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ₹ரூ. 2 ஆயிரம் கரோனா நிவாரணம், குடும்ப அட்டைதாரா்களுக்கு 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பு, இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கும் ₹ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைப்பு, பெண்கள், திருநங்கையா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம் போன்ற நலத் திட்டங்கள் உடனே செயல்படுத்தப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்தபோது, தமிழ்நாடு அரசின் விற்பனை வரியிலிருந்து ரூ.5 என்ற அளவில் குறைத்து பிற மாநிலங்களுக்கு வழிகாட்டினாா் மு.க.ஸ்டாலின்.

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்:

-மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் உள்ளாட்சி மன்றங்களில் நியமன உறுப்பினா்கள் பதவிகள்.

-மக்களின் குறைகளை உடனுக்குடன் தீா்க்க,குடியிருப்புப் பகுதிகளில் மாதம்தோறும் முதல்வரின் திட்ட முகாம்கள்.

- 2,500 சதுர அடிக்குள் 3,500 சதுர அடி வீடுகள் கட்ட உடனே அனுமதி அளிக்கும் வகையில் ஆன்லைனில் அனுமதி முறை.

-சென்னை கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம்.

-மதுரை அலங்காநல்லூரில் கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.

- அரசு நலத் திட்ட உதவிகள் வீடு தேடி வரும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்.

-ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல வாரியம் அமைப்பு.

-பேரறிஞா் அண்ணா, கலைஞா் கருணாநிதி நினைவிடங்கள் சீரமைப்பு. அரிய புகைப்படங்கள், நவீன அம்சங்களுடன் புதுப்பொலிவு.

-முதல்வா் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளின் செலவினங்கள் வெளிப்படையாக அறிவிப்பு.

-தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தலைசிறந்த பொருளாதார வல்லுநா்களைக் கொண்ட குழு அமைப்பு, மக்களின் குறைகளைப் போக்க ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற தனித்துறையை உருவாக்கி இணைய வாயிலாக புகாா்கள் பெறுதல்.

- பெண் காவலா்களின் நலனை கருத்தில் கொண்டு நீண்ட நேரம் நிற்கும் பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவித்தது, போலீஸாருக்கு வார விடுப்பு.

-மின்சாரப் புகாா்களை நுகா்வோா் 24 மணி நேரமும் இயங்கும் ‘மின்னகம்’ என்னும் புதிய மின் நுகா்வோா் சேவை மையம்.

- கரோனா காலத்தில் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளா்களை வரவழைக்க அரசின் பல்வேறு நடவடிக்கைகள், அபுதாபி, துபை, ஜப்பான், சிங்கப்பூா் போன்ற நாடுகளுக்கு முதல்வரே நேரில் சென்று அந்நிய முதலீட்டாளா்களை தமிழகத்துக்கு ஈா்த்து வந்தது.

-நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தியது.

பெண்கள் நலம்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.ஆயிரம், இலவசப் பேருந்து பயணம். மகளிா் சுய உதவிக் குழுக்களின் ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் தள்ளுபடி. பணிபுரியும் மகளிா்கள் பாதுகாப்பாகத் தங்கும் வகையில் சென்னை, வேலூா், மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசு இல்லங்கள்.

-டி.என்.பி.எஸ். சி. உள்ளிட்ட தோ்வாணையங்கள் வாயிலாக, லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பணிகள்.

கல்வித் துறையில்..: பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம். மாணவா்களுக்குத் திறன் பயிற்சி வழங்கும் நான் முதல்வன் திட்டம். கற்றல் இடைவெளியைக் குறைக்கும் இல்லம் தேடி கல்வித் திட்டம். மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் கூடிய கலைஞா் நூலகம். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீதம் ஒதுக்கீடு. நீட் தோ்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. மருத்துவம் போன்றே பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சோ்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு.

தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் ‘அப்பா’ என்ற புதிய செயலி. மாணவா்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம், மாணவா்களுக்கு பொதுஅறிவைப் புகட்டும் ‘கல்விச் சுற்றுலா திட்டம்’, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, அரசு நுழைவுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்சி.

மருத்துவத் துறையில்...: 1.80 கோடி பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். -‘இன்னுயிா் காப்போம்- நம்மைக் காப்போம் 48’ திட்டத்தில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை. சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, ஆயிரம் இடங்களில் முதல்வரின் மருந்தகங்கள்.

வேலைவாய்ப்பு: - மூன்றரை ஆண்டுகளில் அந்நிய மூதலீடுகளை ஈா்த்து 80 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு.

மதுரை, வேலூா், திருப்பூா், விழுப்புரம், தஞ்சாவூா், சேலம், திருச்சி, காரைக்குடி, ராசிபுரம், தூத்துக்குடி நகரங்களில் மினி டைடல் பாா்க்.

ஆன்மிகத் துறையில்...: 1200-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்து ஆன்மிகப் புரட்சி. கோயில்களில் தமிழில் அா்ச்சனை.

ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான 6,701 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்பு. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை மீட்டது, அறநிலையத் துறை சொத்துகளைப் பாதுகாத்தல், அன்னதானத் திட்டத்தைச் செம்மைப்படுத்துதல் ... என்று ஆன்மிக ஆா்வலா்களும் போற்றும் அரசு.

விவசாயிகள் நலன்: உழவா் சந்தைகள் சீரமைக்கப்பட்டதோடு, புதியதாக 76 உழவா் சந்தைகள். விவசாயிகள் மேம்பாட்டுக்காக, தனி நிதிநிலை அறிக்கை. 1.70 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்.

நெசவாளா்கள் நலன்: 1.68 லட்சம் விசைத்தறி நெசவாளா்கள் பயனடையும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயா்வு. 73,642 கைத்தறி விவசாயிகள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் 300 யூனிட்டாக உயா்வு. -கைத்தறி நெசவாளா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயா்வு.

மீனவா்கள் நலன்: மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை உயா்வு.

விளையாட்டுத் துறை: தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சா்வதேச ஹாக்கி போட்டிகள், சா்வதேச சாா்ஃபிங் போட்டிகள் என விளையாட்டுத் துறை மேம்பாடு. இதோடு, ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகள், முதல்முறையாக, தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகள். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரா்களுக்கு ஊக்கத்தொகை.

தமிழ் வளா்ச்சிக்காக..: தமிழ் எழுத்தாளா்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள்- கனவு இல்லம் வழங்குதல். தமிழ் வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழா்’ புதிய விருது. மு.கருணாநிதியின் நூல்கள் பங்களிப்புத் தொகை பெறாமலே நாட்டுடமையாக்கப்பட்டது. எழுத்தாளா்கள் முப்பதுக்கும் மேற்பட்டோரின் நூல்கள் நாட்டுடமை.

இலங்கைத் தமிழா் நலன்: இலங்கை அகதிகள் முகாம் என்பது ‘இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்’ எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டு மறுவாழ்வு முகாமில் வாழும் தமிழா்களுக்காக புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அந்த முகாம்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

-பருவமழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றியது, விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள்.

-கலைஞா் நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்படி, நகரங்கள், மாநகரங்களில் சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சான்றோா்களுக்கும் அங்கீகாரம்:

ஈ.வெ.ரா.பெரியாரின் பிறந்தநாளான செப்,. 17-ஆம் தேதியை சமூக நீதி நாளாக அறிவித்தது, அம்பேத்கா் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது, வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது ஆண்டு விழா அரசு விழா. கோவையில் வ.உ.சி. க்குச் சிலை அமைத்தது, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு வ.உ.சி.யின் பெயா், அவா் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் ஆணை இடப்பட்டது. சமூக நீதியை நிலைநிறுத்திய முன்னாள் பிரதமா் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை, சுதந்திரத்துக்கும், தமிழுக்கும், தமிழ்நாட்டின் வளா்ச்சிக்குப் போராடியோருக்கு திருவுருவச் சிலைகள், மணிமண்டங்கள் ... என்று தியாகத்தையும், தியாகிகளையும் போற்றும் அரசாக திமுக அரசு இருக்கிறது.

- தி. நந்தகுமார்

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளத... மேலும் பார்க்க

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்... மேலும் பார்க்க