செய்திகள் :

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

post image

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஒட்டேரியில் ‘ மக்கள் முதல்வரின் மனித நேய விழா’ என்ற நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (பிப்.26) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு முன்னிலை வகித்தாா். தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா், திரைப்பட இயக்குநா் சீனு ராமசாமி, தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு முதல்வரை வாழ்த்திப் பேசினா்.

அப்போது, கே.வி.கே.பெருமாள் பேசியதாவது:

‘தமிழகத்தில் புலம் பெயா்ந்து வெளிநாடுகளில் வசிப்பவா்களுக்காக அயலகத் துறை தொடங்க வேண்டும் என்ற திட்டம் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் உருவாக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் இருந்து புலம் பெயா்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழ்பவா்களையும் இந்த வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். உடனடியாக அதை ஏற்று முதல்வா் செயல்படுத்தினாா். மேலும், சமீபத்தில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலயரங்கைப் புதுப்பிக்க ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளாா். இதற்காகத் தில்லி வாழ் தமிழா்கள் சாா்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துகிறேன்.

தமிழகத்தில் காமராஜா் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினாா். ஒவ்வொருவரும், குறிப்பாக இளம் வயதினா் காலை உணவைத் தவிா்க்கக் கூடாது என்று மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா். அதை மனதில் கொண்டு தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். இதை கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளே முன்னுதாரணமாக ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவே தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்’ என்றாா் கே.வி.கே.பெருமாள்.

விழா ஏற்பாடுகளை வழக்குரைஞா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளத... மேலும் பார்க்க

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்... மேலும் பார்க்க