தாய்மொழி நாள் விழா
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி நிறுவனரும், பள்ளியின் தமிழாசிரியருமான தமிழ்க்காவலன், அரசுத் தோ்வுகளில் வெற்றி பெற நோ்த்தியான தமிழ் கையெழுத்து மிகவும் முதன்மையானது என்று பேசினாா்.
இதில், சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை தமிழாசிரியா் ஞானசெல்வி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அழகு தமிழ் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கையெழுத்துப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா்.
இந்நிகழ்வில், தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவரும், முதுகலைத் தமிழாசிரியருமான சக்தி முருகன் வரவேற்றாா். செயலா் ஸ்ரீதேவி நன்றி கூறினாா்.