பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி! -ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி என்று ஸ்டீவ் ஸ்மித் புகழாரம் சூட்டியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியத் தழுவி ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 264 ரன்கள் குவிக்க அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் விளாசினார். பின்னர் சேஸிங்கில் மிரட்டிய இந்திய அணியில் விராட் கோலி 84 ரன் குவித்தது மட்டுமின்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இதையும் படிக்க: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக முல்டர் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவியதால் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாகவும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
போட்டி முடிந்ததும் இரு அணியினரின் சந்திப்பில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய வீரர் விராட் கோலி இருவரும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி குறித்து கேட்ட கேள்விக்கு ஸ்மித் பேசுகையில், “ஆம், நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி. இவர் தற்போது மட்டுமின்றி இதற்கு முன்னதாக நிறைய முறை இது போன்று சேஸ் செய்திருக்கிறார்.
அவர் நிதானமாக தனது பலத்தை எடுத்துக்கொண்டு விளையாடுகிறார். அதனை கவனமான போட்டியின் இறுதிவரைக் கொண்டு செல்கிறார். இன்று(செவ்வாய்க்கிழமை) இரவும் அவர் நன்றாகவே விளையாடினார்” என்றார்.
இதையும் படிக்க: ஃபிபா உலகக்கோப்பை பரிசுத்தொகை ரூ.8,700 கோடி!