சாம்பியன்ஸ் டிராபி: ‘கோல்டன் பேட்’ விருதை வெல்லப் போவது யார்?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவருக்கான ‘கோல்டன் பேட்’-ஐ வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்றுவந்த 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டியில் வருகிற மார்ச் 9 ஆம் தேதி முன்னாள் சாம்பியன்கள் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.
8 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 11 சதங்கள் பதிவாகியுள்ளன. அதில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 2 சதங்கள் விளாசியுள்ளார்.
இந்த நிலையில், அதிக ரன் குவித்தவருக்கு வழங்கப்படும் தங்கத்தினாலான கோல்டன் பேட் யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிரித்திருக்கிறது.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் முதலிடத்தில் இருந்தாலும் அவர் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார். அவரைத் தவிர்த்து இந்தியாவின் விராட் கோலி, ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும், நியூசிலாந்து தரப்பில் வில் யங், வில்லியன்மசன், டாம் லேதம் ஆகியோரும் உள்ளனர்.
அனைவருக்கும் இடையே பெரிய ரன் வித்தியாசம் இல்லாததால் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுபவருக்கே இந்த கோல்டன் பேட் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2025-சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்தவர்கள்
பென் டக்கெட் -227 ரன்கள்
ரச்சின் ரவீந்திரா - 226 ரன்கள்
விராட் கோலி- 217 ரன்கள்
ஷ்ரேயஸ் ஐயர் - 195 ரன்கள்
டாம் லேதம் -191 ரன்கள்
கேன் வில்லியம்சன் -189 ரன்கள்
ஷுப்மன் கில் - 157 ரன்கள்
வில் யங் - 150 ரன்கள்
2014, 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் ஷிகர் தவான் கோல்டன் பேட்டை பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து முஷ்ஃபிகுர் ரஹிம் ஓய்வு!