விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்டம்; மேடையில் கட்சித் தொண்டரைத் தாக்கிய முன்னாள் அம...
சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை!
பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
74,308.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 609.87 புள்ளிகள் உயர்ந்து 74,340.09 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207.40 புள்ளிகள் உயர்ந்து 22,544.70 புள்ளிகளில் முடிவடைந்தது.
இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!
நிஃப்டி மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.65%, 1.63% உயர்ந்துள்ளன.
ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
அதேநேரத்தில் டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், ட்ரென்ட், பவர் கிரிட், ஹெச்டிஎப்சி லைஃப், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
மொத்த பங்குகளில் 1,009 பங்குகள் விலை குறைந்தும் 2,987 பங்குகள் விலை அதிகரித்தும் 107 பங்குகள் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன.
ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்து 87.11 ஆக உள்ளது.