ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!
பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
74,308.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்ஸ் 240.78 புள்ளிகள் அதிகரித்து 73,971.01 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 12.45 மணிக்கு சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 91.95 புள்ளிகள் உயர்ந்து 22,429.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிக்க | மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.7%, 1.3% உயர்ந்துள்ளன.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், பிபிசிஎல், சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
அதேநேரத்தில் ட்ரென்ட், டெக் மஹிந்திரா, பவர் கிரிட், ஹெச்டிஎப்சி லைஃப், பெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்படுகின்றன.