மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
மெக்சிகோவில் 9 மாணவர்களை சித்ரவதை செய்து, கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மெக்சிகோவில் பட்டப்படிப்பைக் கொண்டாடுவதற்காக 4 பெண்கள் உள்பட 9 மாணவர்கள், பிப்ரவரி 24 ஆம் தேதியில் ஓக்ஸாக்கா பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றிருந்தனர். இதனிடையே, சுற்றுலா சென்ற மாணவர்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிப்ரவரி 28 ஆம் தேதியில் கடற்கரையிலிருந்து 90 மைல் தொலைவில் உள்ள பியூப்லா - ஓக்ஸாக்கா எல்லையில் ரத்தக் களரியுடன் தனியே நின்ற வாகனத்தில் சடலங்களாக 9 பேரும் மீட்கப்பட்டனர்.
இதையும் படிக்க:அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!
அதுமட்டுமின்றி, 9 பேரின் உடல்களும் சித்ரவதை செய்யப்பட்டது மட்டுமின்றி, துப்பாக்கியால் சுடப்பட்ட வடுக்களும் இருந்தன. மேலும், 9 பேரின் உடல்கள் மட்டுமின்றி, 8 ஜோடி கைகளும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரச் சம்பவத்தினை செய்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மெக்சிகோவில் கொலை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மெக்சிகோவின் மிகவும் வன்முறையான ஆண்டாகக் கூறப்படும் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.