கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி
தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சா் பங்கேற்க வாய்ப்பு
தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்ள உள்ளாா்.
ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது. இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாடு நிகழாண்டு மாா்ச் 17 முதல் மாா்ச் 19 வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளாா். பல ஐரோப்பிய அமைச்சா்கள், துருக்கி, லிதுவேனியா, ஸ்லோவேனியா, இத்தாலி, அயா்லாந்து உள்ளிட்ட நாடுகளின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்.
இந்த மாநாடு தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘ரைசினா மாநாட்டில் உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்வாா். அவா் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரையும் சந்திப்பாா்.
மாநாட்டில் பங்கேற்க ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பயண திட்டமிடல் பிரச்னைகளால் அவா் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தன.