சென்னை மண்ணடி எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை மண்ணடியில் எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மண்ணடியில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு நான்கு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் வியாழக்கிழமை காலை தீடீரென் சோதனையில் ஈடுபட்டனர்.
மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு
இதையொட்டி பாதுகாப்புக்காக அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியதால், அந்த பகுதியைச் சோ்ந்த எஸ்டிபிஐ கட்சியினா், இளைஞா்கள் ஏராளமானோா் கட்சி அலுவலகம் முன்பு திரண்டு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளைக் கண்டித்து கோஷமிட்டனா். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.