செய்திகள் :

குட் பேட் அக்லி: ஹிந்தியில் பெரிதாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டம்!

post image

குட் பேட் அக்லி திரைப்படத்தை ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்திற்கான வணிகமும் பெரிதாக இருக்கும் என்றே தெரிகிறது.

இதையும் படிக்க: டெஸ்ட் வெளியீட்டுத் தேதி!

முக்கியமாக, உலகளவில் 2000 திரைகள் வரை திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தை ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டு வருகிறதாம்.

புஷ்பா, புஷ்பா - 2 படங்களைத் தயாரித்த மைத்ரி மூவிஸுக்கு குட் பேட் அக்லியே முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிபா உலகக்கோப்பை பரிசுத்தொகை ரூ.8,700 கோடி!

ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடும் 32 அணிகளுக்கு மொத்த பரிசுத் தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் நடைபெறும் ஃபிபா உலககோப்பைக்கா மொத்த தொகை இந்தி... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் - 2!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது.முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு அப்டேட்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். நீண்ட நாள்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக... மேலும் பார்க்க

இலங்கை செல்லும் பராசக்தி படக்குழு!

பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்குகிறது. அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவர... மேலும் பார்க்க

பாலிவுட்டிலிருந்து விலகிய அனுராக் காஷ்யப்!

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் ஹிந்தி சினிமாவிலிருந்து விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தி சினிமாக்களில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநரில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள... மேலும் பார்க்க

அனாவசியமானக் கேள்வியைக் கேட்கலாமா? கோபமான இளையராஜா!

இசைமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசைக் கச்சேரிக்காக லண்டன் கிளம்பினார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையு... மேலும் பார்க்க