சென்னையில் கார் சேவையை அறிமுகப்படுத்திய ஸ்டெல்லாண்டிஸ்!
சென்னை: உலகளாவிய வாகன நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ், தனது முதல் மல்டி பிராண்ட் சேவையை 'மோட்டோ-ஆர்' உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தொடக்கமானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட சேவை மையங்களை நிறுவுவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தப்போது, முதல் மல்டி-பிராண்ட் சேவையை மோட்டோ-ஆர் உடன் இணைந்து செயல்பாட்டில் உள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய தரமான, உயர்தர மற்றும் மலிவு விலையில் கார் சேவை கொண்டு வரும். தற்போது பராமரிப்பு & ஆய்வு, உதிரி பாகங்கள் & பழுதுபார்ப்பு, டயர் மாற்றுதல், சீரமைப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றை நிறுவனம் வழங்கி வருகிறது.
உலகளாவிய நிபுணத்துவம், உறுதியான கார் பாகங்கள் மற்றும் தொழில்முறை சேவையை ஆகியவை தற்போது கார் உரிமையாளர்களுக்கு வழங்கி வருவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் ஹசேலா தெரிவித்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் உயர்தர சேவை அனுபவத்தை வழங்கும் ஒரு வலுவான நெட்வொர்க்கை உருவாக்க நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.
இதையும் படிக்க: இந்தியாவில் இஎக்ஸ் 30 மாடலை அறிமுகப்படுத்தும் வால்வோ!