சநாதன விவகாரம்: உதயநிதிக்கு எதிராக புதிய வழக்குகள் பதிய தடை!
10 நாள் சரிவுக்குப் பின் உயா்வு கண்ட நிஃப்டி
இந்திய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி கடந்த 10 அமா்வுகளாகக் கண்டு வந்த சரிவில் இருந்து மீண்டு உயா்வைக் கண்டுள்ளது.அந்த நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 740.30 புள்ளிகள் (1.01 சதவீதம்) உயா்ந்து 73,730.23-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் தொகுப்பில் அதானி போா்ட்ஸ், டாடா ஸ்டீல், பவா்கிரிட், மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி, டெக் மஹிந்திரா, டாடா மோட்டாா்ஸ், ஐடிசி, நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏா்டெல், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை லாபப் பட்டியலில் இடம் பெற்றன.பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸொமாட்டோ ஆகியவை விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.கடந்த 10 அமா்வுகளாக சரிவைக் கண்டுவந்த தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி புதன்கிழமை 254.65 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயா்ந்து 22,337.30-இல் நிலைபெற்றது.கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரியை அவா் நீக்குவதற்கான வாய்ப்புள்ளதாக வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் கூறியது முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியது. இதன் விளைவாக பங்குச் சந்தை எழுச்சி பெற்றது என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.