பள்ளி பேருந்தில் பாலியல் கொடுமை... 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி; கிளீனர் கைது..
செங்கல்பட்டு பாலூரில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளியின் பேருந்தில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு நடந்துள்ளது.
பாலூரில் உள்ள அந்தத் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் பஸ் வசதியும் உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்ததும் வழக்கம்போல, பஸ் மாணவர்களை அவர்களது வீடுகளில் இறக்கிவிட சென்றிருக்கிறது. கிட்டதட்ட அனைத்து மாணவர்களையும் இறக்கிவிட்ட பிறகு, 5 வயது சிறுமி மட்டும் பஸ்ஸில் இருந்துள்ளார். இவர் குறிப்பிட்ட அந்தப் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.

இவருக்கு அந்தப் பஸ்ஸின் கிளீனர் முருகன் பாலியல் தொந்தரவு தந்துள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி நடந்தது என்ன என்று தெரியாமல் தனக்கு வலிக்கிறது என்றும், கிளீனர் செய்த விஷயங்களை பற்றியும் பெற்றோரிடம் அழுதுக்கொண்டே கூறியுள்ளார்.
சிறுமியை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்த அவரது பெற்றோர், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் 50 வயதான முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
