செய்திகள் :

மோடியின் அமெரிக்கப் பயணத்தில் எந்த உடன்பாடும் கையெழுத்தாகவில்லை!

post image

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பில், பிரதமா் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த பிப். 13 ஆம் தேதி அமெரிக்கா சென்றார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றப் பின் மோடியின் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.

இதையும் படிக்க: பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

டிரம்ப் பதவியேற்றப் பின்னர் அமெரிக்கா செல்லும் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவராக மோடியும் சென்றார். அமெரிக்கா பயணத்தில் பிரதமா் மோடி, இந்தியாவில் கல்வி வளாகங்களைத் தொடங்க அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், இருதரப்பு வரத்தக உறவை மேம்படுத்துவது குறித்து மட்டுமின்றி, உயா்கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

அப்போது, ‘அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இரு நாடுகளிடையேயான நட்புறவில் இந்தப் பேச்சுவாா்த்தை குறிப்பிடத்தக்க தருணமாக அமையும்’ என்று பிரதமா் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாகவில்லை என்று வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம்(RTI) பதில் அளித்துள்ளது.

ஓநாய் தாக்குதலுக்கு அடுத்ததாக நாய்களிடம் சிக்கிய உ.பி.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சிறுத்தை, யானை, ஓநாய் முதலான விலங்குகளின் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது நாய்களின் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்வரையில்... மேலும் பார்க்க

கங்கா மாதாவை மோடி அரசு ஏமாற்றிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு

கங்கையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கங்கா மாதாவை ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோயிலுக்குச... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ரூ. 7,500 கோடி மூலம் ரூ. 3 லட்சம் கோடி ஈட்டிய உ.பி. அரசு

மகா கும்பமேளாவில் ரூ. 7,500 கோடி முதலீட்டில் ரூ. 3 லட்சம் கோடி பெறப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார். இது... மேலும் பார்க்க

வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு செய்யும்!

தனிநபரின் வருமானம் மட்டுமின்றி மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யும் நடைமுறை விரைவில் வரவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் இவ்வளவு தொழிற்சாலை விபத்துகளா?

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் 171 தொழிற்சாலை விபத்துக்களில் 124 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 86 பேர் காயமடைந்ததாகவும் மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச... மேலும் பார்க்க