செய்திகள் :

Anurag: "என்னைத் தொந்தரவு செய்த அந்த நபர்; அதிலிருந்து மும்பையில் இருப்பதில்லை" - அனுராக் காஷ்யப்

post image
`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப்.

நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா', 'Rifle Club' படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார். கொஞ்ச காலமாகவே அரசியல் குறித்தும் சினிமா உலகம் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, பாலிவுட் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த வண்ணமிருக்கிறார். சமீபத்தில்கூட பாலிவுட்டில் பிறக்காமல், தமிழ்நாடு, கேரளா எனத் தென்னிந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி எனக்குத் தோன்றும் என்று கூறியிருந்தார் .

அனுராக்

இந்நிலையில் தற்போது மும்பையில் குடியிருப்பது தொந்தரவாக இருப்பதாக மனம் திறந்திருக்கிறார். இது பற்றிப் பேசியிருக்கும் அவர், "வேலைகள் இல்லாத நேரம் நான் தென்னிந்தியாவிற்குச் சென்றுவிடுவேன். மும்பையிலிருந்தால் என் நேரம் வீணாக்கப் போய்விடுகிறது.

தேவையில்லாத விஷயங்களை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. எல்லாருக்கும் மும்பையில் இருக்கும் என் வீட்டின் முகவரி தெரிந்திருக்கிறது. நான் எல்லோரையும் இயல்பாகச் சந்திப்பவன். அதனாலேயே வாய்ப்புக் கேட்டு என் வீட்டின் முன் வரிசையில் நின்று விடுகிறார்கள் .

அனுராக் காஷ்யப்

ஒருமுறை ஒரு இளைஞர் என் வீட்டு வாசலில் நின்று கொண்டு, 'என் தந்தை இறந்துவிட்டார். எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுங்கள்' என்று தொந்தரவு செய்தார். அந்த நேரத்தில் நான் ரொம்ப கஷ்டமான சூழ்நிலையிலிருந்தேன். எவ்வளவு பொறுமையாக எடுத்துச் சொல்லியும் அவர் அங்கிருந்து நகரவில்லை. ஒருகட்டத்தில் அவர் என்னை மிரட்ட ஆரம்பித்துவிட்டார். வாய்ப்புக் கேட்டு அலுவலகம் வரலாம், வீட்டில் வந்து இப்படி தொந்தரவு செய்வது சரியில்லை. அதனாலேயே நான் எப்போதும் என் மும்பை வீட்டில் இருப்பதில்லை. என் மும்பை வீட்டிலும் முழுக்க முழுக்க சிசிடிவி கண்காணிப்பில் வைத்திருப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ரஜினி கால்ஷீட் கிடைப்பதில் சிக்கலா... அட்லீயின் ரூ.650 கோடி பட்ஜெட் சல்மான் கான் படம் ஒத்திவைப்பு?

இந்தியில் ஜவான் படத்தை இயக்கிய இயக்குநர் அட்லீ அடுத்ததாக இந்தியில் சல்மான் கான் நடிப்பில் ரூ.650 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருந்தார். இப்படத்தில் சல்மான் கான் மட்டுமல்லா... மேலும் பார்க்க

Jyothika: `மை டியர் ஜோ சேச்சி!' - ஜோதிகாவுடன் நடித்தது குறித்து நிமிஷா சஜயன் நெகிழ்ச்சிப் பதிவு!

ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற `டப்பா கார்டெல்' வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.ஜோதிகாவுடன் இணைந்து நடித்தது குறித்து நிமிஷா சஜயன... மேலும் பார்க்க

Sonakshi Sinha: ``என் கணவர் அவரது மதத்தைத் திணிக்கவில்லை''- சோனாக்ஷி சின்ஹா

பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, 2010 ஆம் ஆண்டு 'டபாங்க்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில், 'லிங்கா' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஏழு ஆண்டுகளாக காதலித்த தனது நண்பரான ஜாகீர் இக்பால... மேலும் பார்க்க

மன்னத் பங்களாவை காலி செய்து ரூ.24 லட்சம் வாடகையில் புதிய வீட்டில் குடியேறும் நடிகர் ஷாருக்கான்!

மும்பை பாந்த்ராவில் கடற்கரையையொட்டி இருக்கும் நடிகர் ஷாருக்கானின் மன்னத் பங்களா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மன்னத் பங்களா ஒரு செல்பி எடுக்கும் இடமாக இருக்கிறது. இந்த பங்களாவை ஷாருக்கான... மேலும் பார்க்க

Samantha: ``விலகியிருப்பதெல்லம் முடிந்துவிட்டது" - மீண்டும் படபிடிப்புக்கு திரும்பும் சமந்தா!

உடல்நல சிக்கல்கள் காரணமாக சினிமா பணிகளில் இருந்து விலகியிருந்த நடிகை சமந்தா உற்சாகமாக மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். கடைசியாக அமேசானில் வெளியான சிடாடெல் ஹன்னி பன்னி வெப் தொட... மேலும் பார்க்க

``எனக்கும் திருமணம் செய்ய ஆசைதான், ஆனால்... " - பதிலளித்த நடிகை சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ரோஹ்மன் என்பவருடன் காதல் உறவில் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். அதோடு கடந்த 2023ம் ஆண்டு திட... மேலும் பார்க்க