செய்திகள் :

ரஜினி கால்ஷீட் கிடைப்பதில் சிக்கலா... அட்லீயின் ரூ.650 கோடி பட்ஜெட் சல்மான் கான் படம் ஒத்திவைப்பு?

post image

இந்தியில் ஜவான் படத்தை இயக்கிய இயக்குநர் அட்லீ அடுத்ததாக இந்தியில் சல்மான் கான் நடிப்பில் ரூ.650 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருந்தார். இப்படத்தில் சல்மான் கான் மட்டுமல்லாது இரண்டாவது ஹீரோவாக கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை நடிக்க வைக்க கடந்த 6 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்படத்தை சன் பிக்ஸர்ஸ் தயாரிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் ஆறு மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் நடிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. ஆரம்பத்தில் இதில் சல்மான் கானின் தந்தையாக கமல்ஹாசனைத்தான் நடிக்க வைக்க அட்லீ திட்டமிட்டு இருந்தார். ஆனால் அது முடியாமல் போனதால் ரஜினிகாந்த்தை இதில் நடிக்க வைக்க திட்டமிட்டனர். ஆனால் ரஜினிகாந்த் கூலி படத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் அவரது கால்சீட் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கம் வரை ரஜினிகாந்த் கால்சீட் இல்லாமல் இருக்கிறது. கூலி, ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அடுத்த ஆண்டு கூட ரஜினிகாந்த் கால்சீட் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசனை தாண்டி வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று அட்லீயும், சன் பிக்ஸர்ஸ் நிறுவனமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இரண்டாவது ஹீரோ... டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் மூலம் அதிக வருவாய் கொடுக்கக்கூடிய நடிகராக இருக்கவேண்டும் என்று இருவரும் விரும்புகின்றனர்.

ஹாலிவுட் நடிகர் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்தனர். ஆனால் அது பட்ஜெட்டை அதிகமாக்கிவிடும் என்று கருதி அத்திட்டத்தை கைவிட்டுவிட்டு விட்டனர். இரண்டாவது ஹீரோ பிரச்னையால் தற்காலிகமாக சல்மான் கான் படத்தை இயக்குவதை அட்லீ ஒத்தி வைத்திருக்கிறார். சல்மான் கான் தற்போது நடித்து வரும் சிக்கந்தர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். படம் மார்ச் 28ம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளியாகிறது.

Jyothika: `மை டியர் ஜோ சேச்சி!' - ஜோதிகாவுடன் நடித்தது குறித்து நிமிஷா சஜயன் நெகிழ்ச்சிப் பதிவு!

ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற `டப்பா கார்டெல்' வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.ஜோதிகாவுடன் இணைந்து நடித்தது குறித்து நிமிஷா சஜயன... மேலும் பார்க்க

Sonakshi Sinha: ``என் கணவர் அவரது மதத்தைத் திணிக்கவில்லை''- சோனாக்ஷி சின்ஹா

பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, 2010 ஆம் ஆண்டு 'டபாங்க்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில், 'லிங்கா' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஏழு ஆண்டுகளாக காதலித்த தனது நண்பரான ஜாகீர் இக்பால... மேலும் பார்க்க

மன்னத் பங்களாவை காலி செய்து ரூ.24 லட்சம் வாடகையில் புதிய வீட்டில் குடியேறும் நடிகர் ஷாருக்கான்!

மும்பை பாந்த்ராவில் கடற்கரையையொட்டி இருக்கும் நடிகர் ஷாருக்கானின் மன்னத் பங்களா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மன்னத் பங்களா ஒரு செல்பி எடுக்கும் இடமாக இருக்கிறது. இந்த பங்களாவை ஷாருக்கான... மேலும் பார்க்க

Samantha: ``விலகியிருப்பதெல்லம் முடிந்துவிட்டது" - மீண்டும் படபிடிப்புக்கு திரும்பும் சமந்தா!

உடல்நல சிக்கல்கள் காரணமாக சினிமா பணிகளில் இருந்து விலகியிருந்த நடிகை சமந்தா உற்சாகமாக மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். கடைசியாக அமேசானில் வெளியான சிடாடெல் ஹன்னி பன்னி வெப் தொட... மேலும் பார்க்க

``எனக்கும் திருமணம் செய்ய ஆசைதான், ஆனால்... " - பதிலளித்த நடிகை சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ரோஹ்மன் என்பவருடன் காதல் உறவில் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். அதோடு கடந்த 2023ம் ஆண்டு திட... மேலும் பார்க்க

Chhaava: `அது நோக்கம் அல்ல!' - வெற்றியை தொடர்ந்து `சாவா' படத்திற்கு எழுந்த சிக்கல்!

பாலிவுட்டில் விக்கி கெளஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியிருக்கிற `சாவா' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது.ஆனால், மற்றொரு பக்கம் படத்திற்கு சில சிக்கல்களும் எழுந்திருக்கி... மேலும் பார்க்க