செய்திகள் :

Samantha: ``விலகியிருப்பதெல்லம் முடிந்துவிட்டது" - மீண்டும் படபிடிப்புக்கு திரும்பும் சமந்தா!

post image

உடல்நல சிக்கல்கள் காரணமாக சினிமா பணிகளில் இருந்து விலகியிருந்த நடிகை சமந்தா உற்சாகமாக மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.

கடைசியாக அமேசானில் வெளியான சிடாடெல் ஹன்னி பன்னி வெப் தொடரில் வருண் தவானுடன் நடித்த சமந்தா, அடுத்ததாக இந்தி திரையிலக இயக்குநர் இணை ராஜ் மற்றும் டிகே இயக்கும் வெப் தொடர் ரக்த பிரஹ்மத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் வாமிக்கா கப்பி, அலி ஃபாசில், ஆதித்யா ராய் கப்பூர் ஆகியோர் நடிக்கின்றனர்.

Samantha

நியூஸ் 24 சேனலுக்கு அளித்த பேட்டியில், "நான் இப்போது ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முடிக்க வேண்டும். அடுத்ததொரு படம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் தொடங்கிவிடும். அதனால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் திரைப்பட உருவாக்கத்தில் விலகியிருப்பதெல்லம் முடிந்துவிட்டது. இதுதான் என் முதல் காதல்" எனப் பேசியுள்ளார் சமந்தா.

ஏற்கெனவே அறிவித்த பங்காரம் படத்தின் மூலம் சமந்தா தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

``எனக்கும் திருமணம் செய்ய ஆசைதான், ஆனால்... " - பதிலளித்த நடிகை சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ரோஹ்மன் என்பவருடன் காதல் உறவில் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். அதோடு கடந்த 2023ம் ஆண்டு திட... மேலும் பார்க்க

Chhaava: `அது நோக்கம் அல்ல!' - வெற்றியை தொடர்ந்து `சாவா' படத்திற்கு எழுந்த சிக்கல்!

பாலிவுட்டில் விக்கி கெளஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியிருக்கிற `சாவா' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது.ஆனால், மற்றொரு பக்கம் படத்திற்கு சில சிக்கல்களும் எழுந்திருக்கி... மேலும் பார்க்க

Yash: "இதற்காகத்தான் ராவணனாக நடிக்கிறேன்" - தங்கல் இயக்குநரின் `ராமாயணா' படத்தில் நடிப்பது பற்றி யஷ்

இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், `கே.ஜி.எஃப் சாப்டர் 1' என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கன்னட சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து பான் இந்தியா ஸ்டாராகப் பிரபலமானவர் யஷ்... மேலும் பார்க்க

Kangana Ranaut: "பாலிவுட் காதல் கதைகள் திருமணங்களைச் சிதைத்துவிட்டன..." - கொதிக்கும் கங்கனா ரனாவத்

நடிகை சன்யா மல்கோத்ரா நடித்துள்ள 'மிஸஸ்' என்ற படம் சமீபத்தில் ஒ.டி.டி தளத்தில் வெளியாகி பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. ஆணாதிக்கமிக்க வீட்டிற்குத் திருமணமாகி வரும் ஒரு பெண், ... மேலும் பார்க்க

Aamir Khan: "20 ஆண்டுகளாகப் படத்தில் நடிக்கச் சம்பளம் வாங்கல; காரணம்..." - ஆமீர் கான் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது நடித்து வரும் ஜிதாரே ஜமீன் பர் என்ற படம் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. 37 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் இருக்கும் ஆமீர் கான் அடுத்த மாதம் 60வது பிறந்தநாளைக் கொண்... மேலும் பார்க்க

`இருவர்' முதல் `ஜோதா அக்பர் வரை' - அகாடமி அருங்காட்சியகத்தில் 12 இந்திய திரைப்படங்கள் திரையிடல்

அகாடமி அருங்காட்சியகம் 12 இந்தியத் திரைப்படங்களை திரையிடவிருக்கிறது.இது போன்ற திரைப்படங்களை அகாடமி அருங்காட்சியகம் திரையிடுவது வழக்கம்தான். ஆனால், இந்திய சினிமா வரலாற்றில் 12 இந்தியப் படங்கள் திரையிடப... மேலும் பார்க்க