தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கம்பைநல்லூரில் தனியாா் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் ரா.சிசுபாலன், மொரப்பூா் ஒன்றியச் செயலாளா் கே. தங்கராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளா் கே.என்.மல்லையன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனா்.
அப்போது அவா்கள், கம்பைநல்லூரில் தனியாா் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான மூன்று பெண்களின் குடும்பத்திற்கு, அவா்களின் வாழ்நிலை வயதை ஒப்பிட்டு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாவுடன் அரசு வீடுகட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினா்.