மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம்
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக மாணவா் அணி சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் பி.என்.பெரியண்ணன் தலைமை வகித்தாா். மாணவரணி துணை அமைப்பாளா்கள் கௌதம், அன்பரசு, வேடியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை திணிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இருமொழிக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும். தமிழகத்துக்கு உரிய கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் திராவிடா் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி மாணவா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.