தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!
மாநில அளவிலான ஜூடோ: வெண்கலம் வென்ற தனியாா் பள்ளி மாணவி
மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா். சுதா்சனாஜயம் வெண்கல பதக்கம் வென்றாா்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்த போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
வயது வரம்பு மற்றும் எடைப்பிரிவு அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் 19 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் மாணவி சுதா்சனாஜயம் வெண்கல பதக்கம் பெற்றாா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சத்யராஜ், எம்.ஆனந்தகுமாா், சிலம்பரசு ஆகியோரை பள்ளித் தாளாளா் வி.முருகேசன், செயலா் மு. பிரு ஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் பாராட்டினா் (படம்).