'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
TVK:திரைமறைவுக் கூட்டுக்களவாணிகள்; மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு-விஜய் முன்னெடுக்கும் #GetOut Campaign
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்கவிழா பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்வில் மத்திய மாநில அரசுகளை 'திரைமறைவுக் கூட்டுக்களவாணிகள்' என விமர்சிக்கும் வகையிலும் மும்மொழிக் கொள்கை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் #GetOut என கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கவிருக்கிறார்.

இந்த இரண்டாமாண்டு தொடக்க விழாவுக்குத் தமிழகம் முழுவதுமிருந்து நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். கட்சிரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாவட்டத்துக்கு 20 நிர்வாகிகள் வீதம் பாஸ் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். நிகழ்வில் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோரும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில், இந்த நிகழ்வில் மேடைக்கு அருகேயே ஒரு பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. அதில், 'புதிய கல்விக்கொள்கை, மும்மொழித் திட்ட திணிப்போடு சேர்த்து இந்த அவலங்களையும் Get Out செய்திட உறுதியேற்போம் என வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய வாசகங்களும் இடம்பெற்றிருக்கிறது. அதே பேனரில் திரைமறைவு கூட்டுக்களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சனைகளை இருட்டடிப்பு செய்கிறார்கள் போன்ற வாசகங்களும் இருக்கிறது.

'ஒருவர் பாட மற்றொருவர் ஒத்திசைவுடன் அதற்கேற்ப நடனம் ஆட திரைமறைவுக் கூட்டுக் களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்னைகளை இருட்டடிப்பு செய்ய, என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்து வருகின்றனர் என மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசையும் மாநிலத்தில் ஆளும் திமுக அரசையும் விமர்சிக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது.

விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரல்வளையை நெரிக்கும் கோழைத்தனம், வாக்கு வங்கிக்காக சாதி மற்றும் பிற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம் என மத்திய மாநில அரசுகளை விமர்சிகத்து பல விஷயங்களும் அந்த பேனரில் இருக்கிறது. #GetOut என குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த பேனரில் விஜய் கையெழுத்திட இருக்கிறார்.