செய்திகள் :

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது: அமித் ஷா

post image

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்கக்கூடும் எனத் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகின்ற மார்ச் 5-ஆம் தேதி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதையும் படிக்க : 2026 தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்! - விஜய்

இந்த நிலையில், கோவைக்கு இரண்டு நாள்கள் பயணமாக வருகைதந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என்று புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

கோவை பாஜக அலுவலக திறப்புவிழாவில் அமித் ஷா பேசியதாவது:

”தமிழில் பேச முடியவில்லை என்ற வருத்தத்துடன் மன்னிப்பைக் கேட்டுக் கொண்டு உரையைத் தொடங்குகிறேன். மத்திய வர்க்கத்தினர், விவசாயிகளின் நலன் மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கம் தில்லி வெற்றியுடன்தான் தொடங்கியுள்ளது. அதேபோல், 2026 தமிழகத்தில் பாஜக வெற்றியுடன் தொடங்கும்.

திமுகவின் தேசவிரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாகப் போவது உறுதி. தமிழகத்தில் உள்ள வகுப்புவாதம், பிரிவனைவாதம், ஊழல் முற்றிலும் முடிவுக்கு வரும்.

அனைத்து மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. பல்கலைக்கழகத்தில்கூட மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவரும் சூழல் இல்லை.

வேங்கைவயல் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை, கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கும் மாணவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஊழலின் உச்சத்தில் இருக்கிறவர்களை திமுக தேடிதேடி உறுப்பினராக சேர்த்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் வெளிவரக்கூடாது என்பதற்காகதான் முதல்வரும் அவரது மகனும் புதுபுதுப் பிரச்னையை தேடி கொண்டுவருகிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் எந்த தென்னிந்திய மாநிலத்துக்கும் தொகுதிகள் குறையாது என்பதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளார்” என்றார்.

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று!

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு... மேலும் பார்க்க

'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

விஜய் முதலில் தான் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜய், தனது கட்சியின் ஆண்டு விழாவில் மத்திய அரசு, மாநில அரசு இரண... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை முதல் கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 27) முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பிப். 26ல் தென்தமிழக மாவட்டங்கள்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ரூ. 5,000 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி! 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(பிப். 26) கையெழுத்தானது. இதன் மூலமாக கரூர், பெரம்பலூர் மா... மேலும் பார்க்க

கலைஞர்கள், நூலாசிரியர்களுக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி! - முதல்வர் வழங்கினார்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 லட்சம்ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.சென்னை தலைம... மேலும் பார்க்க

உள்ளூரிலேயே விலைபோகாதவர் பிரசாந்த் கிஷோர்: கே.என். நேரு

உள்ளூரிலேயே விலைபோகாத பிரசாந்த் கிஷோரை தமிழக வெற்றிக் கழகத்தினர் இங்கு அழைத்திருப்பதாக அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க