பாகிஸ்தான்: 4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்
பைசன் வெளியீடு எப்போது?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.
இதையும் படிக்க: வீர தீர சூரன் மேக்கிங் விடியோ!
தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், பைசன் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.