செய்திகள் :

தங்கம் இறக்குமதியில் சரிவு!

post image

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் 103 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வெறும் 15 டன் அளவில் மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்தாண்டைவிட நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 85 சதவிகித அளவில் குறையும்.

பல்வேறு சர்வதேச பொருளாதார அரசியல் சூழல்கள் காரணமாக, தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால், அதன் விலை உச்சத்திலேயே இருக்கிறது. இதனால், வங்கிகளும் வியாபாரிகளும் மிகக் குறைந்த அளவு தங்கத்தையே இறக்குமதி செய்து உள்ளனர்.

இதையும் படிக்க:கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்!

கடந்த 10 ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி, சராசரியாக 76.5 டன்களாக பதிவாகியிருந்தது. தங்கம் இறக்குமதி குறைந்தால், அதற்கான செலவினமும் குறைந்து, அந்நிய செலாவணி வெளியேறுவது குறையும்; இதனால் ரூபாயின் மதிப்பு நிலையானதாக இருக்கும். இது பொருளாதாரத்தை மிகவும் நிலையானதாகவும், வெளிப்புற கடன்களை குறைவாக சார்ந்திருக்கவும் செய்யும்.

உலகின் இரண்டாவது பெரிய தங்கச் சந்தையாக இந்தியா இருப்பதால், இந்தக் குறைவு பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சி: 4 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

உத்தர பிரதேசத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சித்த வழக்கில் 4 காவலா்களுக்கு பரேலி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ... மேலும் பார்க்க

பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20%-க்கு மேல் அதிகரிக்க முடிவு

பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நீதி ஆயோக் சாா்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் பு... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பங்கேற்காத ராகுலை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்- மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

மகா கும்பமேளாவில் பங்கேற்காத காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே ஆகியோரை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: 2 நாள்களில் மீட்புப் பணிகள் நிறைவடையும்- மாநில அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் 2 நாள்களில் நிறைவடையும் என்று மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தாா். தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்... மேலும் பார்க்க

குற்றம் இழைக்கும் அரசியல் தலைவா்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவா்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பள்ளிகள் அதே பெயரில் கிளைகள் தொடங்க அனுமதி- விதிமுறைகள் தளா்வு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்கீழ் (சிபிஎஸ்இ) செயல்படும் பள்ளிகள், அதே பெயா் மற்றும் இணைப்பு எண்ணுடன் கிளைகள் தொடங்க அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ம... மேலும் பார்க்க