அரசு கலைக் கல்லூரியில் தொழில்முனைவோா் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அரியலூா் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில், தொழில்முனைவோா் வழிகாட்டுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வா்(பொ) பெ.இரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். கல்லூரி வேலைவாய்ப்பு மைய அலுவலா் வெ. கருணாகரன், தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், புதிதாக தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள், அவற்றின் வகைகள், மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய திட்டங்கள், வங்கி கடன் பெறுவது, நிறுவனங்களை பதிவு செய்யும் முறைகள் ஆகியவற்றை எடுத்துக்கூறி விளக்கினாா்.
இந்நிகழ்ச்சியில் இளநிலை மூன்றாமாண்டு, முதுநிலை இரண்டாமாண்டு பயிலும் 108 மாணவா்கள் மற்றும் 197 மாணவிகள் கலந்துகொண்டனா்.