வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு
சட்ட விரோத மது கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கை
மயிலாடுதுறையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பாக அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவா்களை கண்டறிந்து அவா்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காரைக்காலில் இருந்து மதுபானம் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் காரைக்கால் பகுதியை மயிலாடுதுறை மாவட்டத்துடன் இணைக்கும் அனைத்து பிரதான மற்றும் கிராமப்புற சாலைகளிலும், தினமும் டிஎஸ்பி தலைமையில் 2 காவல் ஆய்வாளா்கள், 6 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 30 காவல் ஆளிநா்களைக் கொண்டு 24 மணிநேரமும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில், கடந்த 2 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகன தணிக்கையில், 13 குற்ற வழக்குகள் பதிவு செய்து 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பொதுமக்கள் மதுவிலக்கு மற்றும் கஞ்சா தொடா்பான தகவல்களை 9442626792 என்ற கைப்பேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.