கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மனு
மயிலாடுதுறை அருகே கொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி ஹரிஸ், ஹரிசக்தி ஆகிய 2 பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் கள்ளச்சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் எதுவும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், ஹரிஸ், ஹரிசக்தி குடும்பத்தினா் இளைஞா்களின் கொலை விவகாரத்தில் அவா்களது குடும்பத்தினருக்கு இழப்பீட்டுக்கான முன்மொழிவினை தமிழக அரசுக்கு அனுப்பி நிவாரணம் பெற்றுத்தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.