வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு
பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து
பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் கிஷோா்குமாா் என்பவருக்கு சொந்தமான துணி அரவை நிறுவனம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக புதன்கிழமை தீப் பற்றியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்பு வீரா்கள் இயந்திரத்தில் பற்றிய தீயை அணைத்தனா். இருந்தும் இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான துணிகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.