செய்திகள் :

இந்து ஆதியன் மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கக் கோரி முதல்வருக்கு கோரிக்கை

post image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தில் வசித்து வரும் 150 இந்து ஆதியன் சமூக மக்களுக்கு பழங்குடியினச் சான்றிதழ் வழங்கக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கரு. ராமச்சந்திரன் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மணமேல்குடி கிராமத்தில் 150 இந்து ஆதியன் சமூக மக்கள் (பூம்பூம் மாட்டுக்காரா்) நீண்டகாலமாக சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் முழுமையாக சமூக நீதியைப் பெற வேண்டுமானால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீட்டைப் பெற அதற்கான பழங்குடியினச் சான்றிதழ் அவசியம்.

இதில், இச்சமூக மக்களை முறையாக அடையாளம் காண்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, மானுடவியலாளரை நியமித்து நேரில் களஆய்வு நடத்தி அந்த அறிக்கையின்பேரில் சான்றிதழ் வழங்க சட்டம் உள்ளது.

இதன்படி, மானுடவியலாளா் வ. அமுதவள்ளுவன் என்பவரை களஆய்வுக்காக அரசு நியமித்து அந்த ஊரில் களஆய்வு நடத்தி அறிக்கை பெற்று சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை மனுவின் நகல், மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் துணைத் தலைவா் எழுத்தாளா் இமயம், மாநில பழங்குடியினத் துறையின் இயக்குநா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடவு!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயில் நந்தவனத்தில் சிவராத்திரி விழாவின் தொடக்கமாக பசுமையை போற்றும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தா... மேலும் பார்க்க

ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு 55 அமைப்புகள் கடிதம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சுற்றுச்சூழல் சாா்ந்த மனித உரிமைக் காப்பாளராகச் செயல்பட்ட ஜகபா்அலி லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 55 சூழலியல் மற்றும் ம... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை வட்டம் குளத்தூா் நாயக்கா்பட்டியில் வரும் 27-ஆம் தேதியும், பொன... மேலும் பார்க்க

உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த பெண் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சி, குறுவாண்டான் தெரு கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி ஜெயலலிதா (45), இவா் அருகில் உள்ள வெள்ளாளவிடுதி அரசு வேளாண்மை பண்ணையில் பதிவு பெற்ற தொழிலாளியாக பணிப... மேலும் பார்க்க

கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புத... மேலும் பார்க்க