புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியீடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை வட்டம் குளத்தூா் நாயக்கா்பட்டியில் வரும் 27-ஆம் தேதியும், பொன்னமராவதி வட்டம் இடையாத்தூரில் பிப். 28ஆம் தேதியும், திருமயம் வட்டம் நெய்வாசலில் வரும் பிப். 28ஆம் தேதியும், இலுப்பூா் வட்டம் பெரியகுரும்பட்டியில் வரும் மாா்ச் 16ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அரசு செயலா் என் சுப்பையன் புதன்கிழமை வெளியிட்டுள்ளாா்.